Thread inspired from @karthick_45 இங்கு குறிப்பிட்டுள்ள படங்கள் அனைத்தும் நம்நாட்டில் நடந்த உண்மை சம்பவத்தையும்,கொலைகளையும் பற்றிய தமிழ் அல்லாத பிறமொழி இந்திய படங்கள்,இது அனைத்தும் திரில்லர் படங்கள்.இவை வாழ்கை வரலாறு படங்கள் இல்லை.
TALVAR(HINDI)-மே 2008,NOIDA இரட்டை கொலை சம்பவம் ஆருஷி (13) ஹேம்ராஜ் பஞ்சதே(45),இதை விசாரித்த போலீஸ் அதிகாரிகள் கொலையாளி யார்? ஏன்? எதற்கு? எப்போது? எப்படி?,என்று பல கோணங்களில் விசாரித்து தீர்க்க முடியாமல் போன சம்பவம். இதை படமாக பல கோணங்களில் உருவாகியிருப்பர்.அரசியல் பேசும் படம்.
MADRAS-CAFÉ(HINDI)-மே1991,முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி இறந்த நாள்,ஒருவரின் போராட்டம் ஒருவருக்கு தீவிரவாதம் போல்தான் தெரியும்,இலங்கை-ஈழம்-இந்தியா இவ்ரகளுக்குள் நடந்த உள்நாட்டு அரசியல்,சண்டை,சதிகள்,எல்லாம் கற்பனையோடு கொலைக்கான காரணம் இதுவாக இருக்கும் என்று யூகித்து எடுத்த படம்.
KILLING VEERAPAN (KANNADA)-தமிழ்நாடு-கர்நாடக மத்தியில் பெரும் பிரச்சனையாக இருந்தவர்"வீரப்பன்"பலருக்கு இவர் நல்லவர் அனால் பலருக்கு கெட்டவர்.பல முறை முயன்றும் போலீஸாரால் அவரை நெருங்க முடிவயவில்லை,ஆனால் இறுதியில் அவரை சுற்றி வளைத்து சூடு கொன்றனர்,போலீஸின் கண்ணோட்டத்தில் நகரும் கதை
Parmanu: The Story of Pokhran'(HINDI)-அணுஆராய்ச்சி செய்கிறார்கள் என்றாலே உலக நாடுகள் அனைத்துக்குமே ஒரு பயம் வரும்,மே 1998,இந்தியா பொக்ரானில் தனது அணுஆராய்ச்சிய செய்தது,அமெரிக்கா SATELLITE இந்தியாவை உளவு பாத்தது,அவர்களுக்கு தெரியாமல் ஆராய்ச்சியை எப்படி செய்தனர் என்று விலகிய படம்
TAKEOFF-டேக் ஆப்(Malayalam)-இராக்கில் உள்ளூர் போரின் போது, (ISIS)சிக்கி தவித்த இந்திய செவிலியர்களை எப்படி காப்பாற்றி இந்தியாவிற்கு அழைத்து வந்தனர்.உண்மை சம்பவம்:ஜூன் 2014,டிக்ரிட் நகரில் மாட்டிக்கொண்ட 49செவிலியர்களை இந்திய அரசு(சுஷ்மா ஸ்வராஜ்,உம்மென் சண்டி,அஜய் குமார்) மீட்ட பணி.
THE TASHKENT FILES-தி தாஷ்கண்ட் பைல்ஸ்(HINDI) தாஷ்கண்ட் ஓப்பந்தம் கையெழுதிட்டா அடுத்த நாள்,இந்தியாவின் முன்னாள் பிரதமர் சாஸ்த்ரி அவர்கள் மரணம் அடைகிறார்,அனால் அவர் மரணம் மர்மாக இன்றளவும் இருக்கிறது.இது பலரின் சதியாக இருக்கலாம் என்பது கருத்து.இதை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம்.
BLACK FRIDAY (HINDI) - மார்ச்,1993 ,இந்தியாவில் முதல் முறை RDX வெடிகுண்டு பயன்படுத்தி நடத்தபட்ட தாக்குதல்,மும்பையில் உள்ள சுமார் 12 இடங்களில் வாகனம் வழியாக வெடிகுண்டு வைத்து,நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராஹிம் முன்னிலையில் நடந்த தாக்குதல்.இதன் ஒளி ஒலி வடிவமே இந்த படம்.
UNDA(MALAYALAM)-2014,மக்களவை தேர்தல் சமையத்தில் கேரள போலீஸ் குழு,சட்டிஸ்கர் மாநிலத்திற்கு பாதுகாப்பு பணிக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.அனால் அவர்கள் பணிக்கு சென்ற இடத்தில்,மாவோயிஸ்ட்ர்களால் தாக்குதல் நடக்க வாய்ப்புகள் இருந்தது.அதை மையப்படுத்தி எளிய முறையில் உருவாக்கிய படம்.
VIRUS-வைரஸ்(MALAYALAM)- மே 18,2018,NIPAH வைரஸ் கேரள மாநிலத்தில் பரவ தொடங்கியது,அதை தடுக்க/குணப்படுத்த கேரள மருத்துவர்களால் பல வழிகள் வகுக்கப்பட்டது.அவர்களின் ஆரம்ப கால கட்டுப்படுதல் பல உயிர்களை காப்பாற்றி,இறுதியில் எப்படி பரவியது என்று யூகித்தனர்.இதை தழுவி எடுக்கபட்ட தத்ரூப படம
THE ATTACKS OF 26/11-இந்தியாவின் மீது தீவிரவாத தாக்குதல் இன்றும் முழுவதுமாய் நிறுத்த படவில்லை,நவ,2008,Lashkar-e-Taiba தீவிரவாதிகள் மும்பையை சுமார் பத்து இடங்களில் தாக்கினர்,சுமார் நான்கு நாட்கள் நடந்த இந்த தாக்குதலில் பல மக்கள் இறந்தனர்,அந்த கொடிய செயலை பற்றி விலகிய படம்.
URI THE SURGICAL STRIKE(HINDI)-பாகிஸ்தானால்,இந்தியா மீது நடத்தப்பட்ட மோசமான தாக்குதலில் ஒன்று.செப்டம்பர்,2016 தூங்கி கொண்டுருந்த இந்திய வீரர்கள் மீது நடந்த தாக்குதல்.இதற்கு பழிதீர்க்க இந்தியா ராணுவம் அதிரடி தாக்குதல் செய்தது.ராணுவ பின்னணியில் நேர்த்தியாக உருவான படம்.
AIRLIFT-ஏர் லிப்ட்(HINDI)-குவைத்தில் வாழும் ஒரு இந்தியா தொழில் அதிபர்,போர் காலத்தில் அங்கே சிக்கி தவிக்கிம் இந்தியா மக்களை எப்புடி காப்பாத்தி சொந்த நாட்டிற்கு அனுப்புகிறார். உண்மை சம்பவம் :ஆகஸ்ட் 13,1990 -அக்டோபர் 20,1990 ,மதுன்னி மத்தியூஸ் என்பவரியின் உதவிடன் நடந்த மீட்பு பணி.