1.திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியைப் பிடித்த ஆண்டு 1967. அப்போது சோவுக்கு வயது 33. அதுவரை சோவின் நாடகங்களில் பொதுவான கிண்டலும் நையாண்டியும் நகைச்சுவையுமே இருந்தன. அடுத்த இரண்டாண்டுகளில் அண்ணா மறைந்து கலைஞர் கருணாநிதி முதலமைச்சரானார். மத்தியில் இருந்த இந்திரா காந்தியின்
2.ஆட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்டார்.

மத்தியிலும் மாநிலத்திலும் சோ ஏற்க விரும்பாத அரசியலின் பிரதிநிதிகளாக அவர்கள் இருந்தார்கள். அந்தச் சூழலில்தான் 'துக்ளக்' நாடகம் உருவாக்கப்பட்டது. தோளில் நீளமான துண்டும் கரை வேட்டியும் அணியும் திராவிட இயக்கப் பிரமுகர்களின் தோற்றமே
3.சோவின் நாடகங்களில் ஊழல் அரசியல்வாதியின் பிம்பமாகச் சித்திரிக்கப்பட்டது. கலைஞர் கருணாநிதி ஆட்சிக்கு வந்த ஒரே வருடத்தில் துக்ளக் பத்திரிகை தொடங்கப்பட்டது. திராவிட இயக்கம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியதை விரும்பாத சனாதன சக்திகளின் பிரதிநிதியாக சோ விளங்கினார்.
4.1967இல் தான் தி.மு.கவை ஆதரித்து தவறு செய்துவிட்டதாக, தானே 1971இல் ஒப்புக்கொண்டு, அன்றைக்கு சோஷலிசக் கொள்கையை முன்னிறுத்திய திமுக - இந்திரா எதிர்ப்பில் இறங்கிய ராஜாஜியின் வலதுசாரிப் பொருளாதாரப் பார்வையின் ஆதரவாளர்களின் குரலாக சோ விளங்கினார்.

துக்ளக் பல விதங்களில் தமிழின்
5.முன்னோடிப் பத்திரிகையாக அன்று விளங்கியது. அப்போது இருந்த வெகுஜன இதழ்களில் எல்லாம் அரசியல் என்பது தலையங்கத்திலும் கார்ட்டூனிலும் மட்டுமே இடம்பெற்றது. அரசியல் கருத்துகளோ அரசியல் பற்றிய கருத்துகளோ விரிவாக இடம்பெற்றதில்லை. சிறுகதை, தொடர்கதை, சினிமா, துணுக்குகள், மருத்துவம்,
6.ஜோசியம் முதலிய பகுதிகளே பெரிதும் இருந்தன. பாபுராவ் படேல் ஆங்கிலத்தில் நடத்திய 'மதர் இந்தியா'வைப் பின்பற்றி, நையாண்டி வடிவத்தை எடுத்துக்கொண்ட துக்ளக், முழுக்க முழுக்க அரசியல் பற்றிய பத்திரிகையாக விளங்கியது. புலனாய்வு இதழியல் எனப்படும் இன்வெஸ்ட்டிகேட்டிவ் ஜர்னலிசம்,
7.நடப்பு நிகழ்ச்சிகள் பற்றிய தகவல்களைத் தாண்டி ஆழமாக, விசாரித்து எழுதுதல் ஆகியவற்றை எழுபதுகளில் துக்ளக்தான் முன்னெடுத்தது. அடுத்த பத்தாண்டுகளில் ஜூனியர் விகடன், தராசு, நக்கீரன் முதலிய இதழ்கள் வரும்வரை போட்டிகள் இல்லாத சமூக விமர்சன இதழாக அது விளங்கியதால், சோவின்
8.துணிச்சலான விமர்சகர் பிம்பம் வலுப்பட்டது.

கலைஞர் கருணாநிதியின் ஆட்சியில் நடந்த பல அராஜகங்களை அப்போது துக்ளக்தான் விரிவாக எழுதியது. அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கலைஞருக்கு டாக்டர் பட்டம் அளித்தபோது நடந்த போலீஸ் வன்முறை, திருச்சி கிளைவ் ஹாஸ்டலுக்குள் நுழைந்து
9.மாணவர்களைத் தாக்கியது, சேலம் திராவிடர் கழக ஊர்வலத்தில் ராமர் படம் இழிவுபடுத்தப்பட்டது, வீராணம் குழாய் - சர்க்கரைக் கொள்முதல், பூச்சி - மருந்து ஊழல்கள் எனப் பல விஷயங்கள் பற்றிய கட்டுரைகள் வாசகரிடம் செல்வாக்கு அதிகரிக்கச் செய்தன. பதிலுக்கு துக்ளக் அலுவலகம் தாக்கப்பட்டதும் இதழ்
10.பறிமுதல் செய்யப்பட்டதும் 'துக்ளக்' நாடகத்துக்கு எதிர் நாடகத்தைச் சில திமுகவினர் அரங்கேற்றியதும் சோவுக்கு மேலும் செல்வாக்கைக் கூட்டின. அடுத்துவந்த நெருக்கடி நிலையின்போது சோ காட்டிய துணிச்சலும் விமர்சனமும் நடுத்தர வகுப்பு வாசகர்களிடையே பெரும் பிரமிப்பை ஏற்படுத்தின.
11.ஆதாரம் :
முரண்பட்டாலும் நண்பர்
https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=35877&cat=21&Print=1
You can follow @MalathyJayara15.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.