சற்றே நீளமான பட் ஆச்சரியம் அளிக்கும் பதிவு. திருச்சி, தஞ்சை, கரூர், பெரம்பலூர்,. கடலூர், விழுப்புரம் , இராமநாதபுரம் , திண்டுக்கல் இந்த மாவட்டங்களின் பெரும்பாலான பட்டதாரிகளை உருவாக்கிய கலைமனை தான் புனித வளனார் கல்லூரி. அனைவருக்கும் புரியும்படி சொல்ல செயின்ட் ஜோசப் காலேஜ்
கலை அறிவியல் படிப்புகளுக்கு லயோலா கல்லூரி மட்டுமே தமிழகத்தின் அடையாளம் என்று நினைப்பவர்கள் பலர் ஆனால் அவர்களுக்கு தெரியாத ஒன்று லயோலா கல்லூரி ஆசிரியர்கள் பெரும்பாலும் படித்து சென்றது ஜோசப் காலேஜ். அனைவருக்கும் கல்லூரி என நினைக்கும் போது பல்வேறு கனவுகள் துளிர்க்கும்
அப்படி நம்மில் பலருக்கும் தூளிர்க்கும் ஆசைதான் வளனார் கல்லூரி வாழ்க்கை. கிட்டத்தட்ட சமூக நீதியின் இருப்பிடமாகக் கூட இதனை நாம் பார்க்கலாம். நிற்க பூக்கடைக்கு விளம்பரமா என்று கேட்பது புரிகிறது. ஆனால் இழை கல்லூரி நூலகத்தை பற்றியது
1909ல் கிட்டத்தட்ட 9000 புத்தகங்களுடன் தொடங்கப்பட்ட கல்லூரி நூலகம் இன்று பெரிதாக வளர்ந்துள்ளது. இப்போது இருக்கும் நூலகத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது 2007 அப்போது நான் இளங்கலை மாணவன். 2008 சரியாக ஒரே ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டு அப்போதைய உயர்கல்வித்துறை அமைச்சர்
திரு பொன்முடி மற்றும் துணை குடியரசுத் தலைவர் திரு அன்சாரி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. தரைதளம் மற்றும் நான்கு மாடிசேர்ந்த ஐந்தடுக்கு கட்டிடம். இந்த இடத்தில் முக்கியமாக நினைவு கூற விரும்பும் நபர் திரு இராஜரத்தினம் கல்லூரி முன்னாள் முதல்வர்
இவர் பற்றிய தனிமனித விமர்சனங்கள் தவிர்த்து பார்த்தால் நிர்வாக திறன் மிக்கவர். அவரின் கனவுதான் இந்த நூலகம். தரைதளம் இரண்டு தேர்வறைகளுடன் இந்திய குடிமைப் பணி தேர்வுகளுக்கான பயிற்சி மையம், தேசிய தகுதித்தேர்வு பயிற்சி மையம்,. ஒரு கருத்தரங்கம் இவற்றை உள்ளடக்கியது.
முதல் தளம் மாணவர்களுக்கான இலவச இணையதள மையம். இங்கு கணினி வாங்க இயலாத மாணவர்கள் தங்களின் கணிணி தொடர்பான அனைத்து வேலைகளும் செய்து கொள்ள முடியும். கிட்டத்தட்ட 500 கணினிகள் இணைய வசதியுடன் யோசித்துப்பாருங்கள் இன்று தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு சவால் விடும் தரம்.
இரண்டாம் தளம் இளங்கலை படிக்கும் பகுதி மற்றும் முதுகலை படிக்கும் பகுதி. ரெபரன்ஸ் செக்ஷன் . விலை அதிகமான வெளிநாட்டு புத்தகங்கள் இங்கு இருக்கும் நீங்கள் குறிப்பேடுடன் செல்லலாம். அல்லது அங்கேயே நகல் எடுக்கும் வசதியும் இருக்கும்.பக்கம் ஒன்றுக்கு 40 பைசா. இந்த இடம் தான்
என் போன்ற பலருக்கும் சொர்கம். நான் முதுகலை மாலைநேரக் கல்லூரி. அதனால் காலை 9:30 மணிக்கு reference section சென்றால் கிட்டத்தட்ட 1:30 வரை படிப்பேன் பின் சாப்பிட்டுவிட்டு ( கல்லூரியில் மதிய உணவு சிலருக்கு இலவசம்) 2 மணி வகுப்பிற்கு செல்வேன். இளங்கலையும் 1:35 கல்லூரி
முடிந்த பின் கிட்டத்தட்ட 5 மணி வரை நூலகம் மட்டும்தான் வாழ்விடம். மூன்றாம் தளம் புத்தகங்கள் எடுக்கும் டிஸ்ட்டரிபியூஷன் செக்ஷன். கிட்டத்தட்ட ஒரு சிறிய கிராமம் அளவில் இருக்கும் . இளங்கலை மாணவர்களுக்கு இரண்டு புத்தகம். முதுகலை மாணவர்களுக்கு மூன்று புத்தகம் என்பது விதி.
ஆனால் நானோ என் நண்பர்கள் யூஜின் ஜெரால்டு அட்டைகளையும் சேர்த்து பிடுங்கிக்கொள்வேன். இரண்டு தமிழ் இலக்கிய புத்தகம், ஒரு போட்டித்தேர்வு புத்தகம், ஒரு ஆங்கில புத்தகம், இரண்டு பாட சம்மந்த புத்தகம். இதுதான் என் வழக்கம். அதே தளத்தில் ஆய்விதழ் பிரிவு. முதுகலை படிக்கும்போது
என் ஆசிரியர்கள் பிஹெச்டி தீசிஸ், MSc தீதிஸ் இதைப்படிக்கவே தவமிருப்பேன். கையில் எழுதியது தொடங்கி , டைப்ரைட்டரில் அடித்த தீசிஸ் வரை அத்தனையும் இருக்கும். என் இப்போதைய தீசிஸ் அதன் கால் தூசுக்கும் ஒப்பாகாது. நான்காம் தளம் அரிய புத்தக பாதுகாப்பு பிரிவு.
உலகில் எங்கு தேடியும் கிடைக்காத சில கையெழுத்து புத்தகங்கள் இங்கு மட்டுமே இருக்கும். தவிர இங்கு செல்ல முதல்வரிடம் சிறப்பு அனுமதி வாங்க வேண்டும். இது தவிர புத்தக வங்கி(book bank) திட்டம் நாம் படித்து முடித்து பிறருக்கும் உதவும் நோக்கில் நமது புத்தகங்களை இங்கு தரலாம்
நல்ல அருமையான திட்டம் வாங்கி படிக்கும் மாணவர்கள் அந்த வருடத்தின் இறுதியில் மீண்டும் கொடுத்துவிட வேண்டும். காலத்திற்கும் மறக்க முடியாத இடம். செபின் ஜோசப் என்ற சீனியர் அண்ணணின் புத்தகங்கள் தான் எனக்கு எப்போதும் கிடைக்கும் நன்றி செபின் அண்ணா.
இப்படி பல வகையில் இந்த நூலகம் பலரின் வாழ்வில் உயிராக கலந்துள்ளது. இப்போது கணினியில், அலைபேசியில் படிக்கும் எவருக்கும் அந்த நூலகத்தின் சுவை தெரியாது. அருப்பே லைப்ரரி எனக்கு என்னை யாரென்று காட்டியது. எனக்கு உலகத்தை காட்டியுது
எப்போதும் பெருமையுடன் சொல்வேன் நான் வளனார் கல்லூரி புதல்வன் என்று.
You can follow @bharath_kiddo.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.