கொஞ்சம் சோறு, கொஞ்சம் வரலாறு

தூத்துக்குடி மக்ரூன்

பொதுவாக தூத்துக்குடி என்றாலே அனைவருக்கும் நியாபகம் வருவது உப்புதான். ஆனால் அதையும் தாண்டி இனிப்புக்கும் பெயர்போனதுதான் தூத்துக்குடி. ஆம் தூத்துக்குடியில் தயாராகும் இனிப்பு பண்டமான மக்ரூன் மிகப்பிரபலம். இதன் சுவையே தனி.

(1/n)
இந்த பதிவை படிப்போர் எத்தனை பேர், மக்ரூன் சாப்பிட்டு இருப்பீர்கள் என தெரியவில்லை. ஆனால் ஒருமுறை சாப்பிட்டு விட்டால் இந்த மக்ரூன் சுவைக்கு அடிமையாகி விடுவீர்கள். தூத்துக்குடியில் பிரபலமான மக்ரூன், உண்மையில் தூத்துக்குடியை சேர்ந்தவை அல்ல போர்ச்சுக்கிஸ் நாட்டை சேர்ந்தது.
(2/n)
எவ்வாறு தூத்துக்குடியின் பிரபலமான இனிப்பாக மக்ரூன் மாறியது என்பதை சிறு வரலாறோடு பார்ப்போம்.

கடல் வாணிபத்துக்கும், முத்துகுளிப்புக்கும் பெயர் போன தூத்துக்குடி, முத்துநகரம் என்றும் அழைக்கப்படுகிறது. தூத்துக்குடி நகருக்கு எவ்வாறு இந்த பெயர் வந்தது என்பதை விக்கிப்பீடியா
(3/n)
தளம் இவ்வாறு குறிப்பிடுகிறது.,
"கி.மு.123ல் தாலமி என்ற கிரேக்க பயணி தனது பயண நூலில் "சோஷிக் குரி'(சிறு குடி)சோதிக்குரை என்ற முத்துக்குளித்துரை நகரம் என்று குறிப்பிட்டுள்ளார். அவர் குறிப்பிடும் சோதிக்குரை நகரம்தான் தூத்துக்குடி என்று வரலாற்று அறிஞர்கள் இனம் கண்டுள்ளனர்."
(4/n)
மற்றொரு காரணமும் சொல்லப்படுகிறது, நீர் நிறைந்த நிலத்தைத் தூர்த்து, துறைமுகமும் குடியிறுப்பும் தோன்றிய ஊர் என்பதால் தூத்துக்குடி என்றாயிற்று. கடல் வழி வந்த பிறநாட்டு பயணிகளும் தூத்துக்குடி பற்றி வரலாற்று குறிப்பு எழுதியுள்ளனர்.

வாணிபர்கள், பயணிகள் வந்து செல்வதற்கு (5/n)
தோதுவாக பாண்டிய மன்னன் அமைத்த துறைமுகம் இருந்தது. கி.பி 1532 ஆம் நூற்றாண்டில் முதன்முதலாக போர்ச்சுக்கிஸ் படை தூத்துக்குடியில் கால் வைத்தது. பின்னர் கி.பி 1658 வரை கிட்டத்தட்ட 125 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்தனர்.

இந்த நூற்றாண்டு காலத்தில், போர்ச்சுக்கிஸ் நாட்டின்
(6/n)
பழக்க வழக்கங்கள் , உணவு வகைகள் போன்றவற்றை அவர்கள் தூத்துக்குடியிலிருந்து வெளியேறும் போது விட்டு சென்றனர். அவ்வாறு அவர்கள் விட்டுச்சென்ற ஒரு இனிப்பு வகைதான் மக்ரூன்.

என்னோட ஊர் கோவில்பட்டியிலிருந்து தூத்துக்குடி ஒண்ணேகால் மணி நேர பயணம்தான். பள்ளி,கல்லூரி காலகட்டங்களில் (7/n)
அவ்வப்போது விடுமுறை நாட்களில் சித்தி வீட்டுக்கு செல்லும்போது பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள பேக்கரியில் தவறாமல் மக்ரூன் வாங்கி சாப்பிட்டுவிடுவேன். சில நேரங்கள்ல சித்தி அல்லது தம்பி எங்க வீட்டுக்கு வரப்போ மக்ரூன் வாங்கிட்டு வருவாங்க. வாங்கிட்டு வந்த கொஞ்ச (8/n)
நேரத்துலயே பாக்கெட் காலி ஆகிடும்.

இனிப்பு பண்டமான மக்ரூன், பிஸ்கட்டை விட மிகவும் மொறுமொறுப்பாக இருக்கும். ஒரு பீஸ் எடுத்து வாயில் வைத்து கடிச்சு சாப்பிட்டோம்னா.. .அடடா அந்த மக்ரூன் ஓட சேர்ந்து அதன் சுவையில் நாமும் கரைந்து விடுவோம். ஒன்று மட்டும் எடுத்து சாப்பிட்டால் (9/n)
திருப்தி தராது. 4,5 பீஸ் எடுத்து சாப்பிட்டால்தான் திருப்தியாக இருக்கும். முழுவீச்சில் ஒரு பாக்கட் மக்ரூன் கூட சாப்பிடலாம், திகட்டாது, சலிப்படையாது.

மக்ரூன் மற்ற இனிப்பு வகைகள் போல , டப்பாவில் போட்டு வைத்து நேரம் கிடைக்கும்போது சாப்பிட்டுக்கொள்ளும் இனிப்பு வகை அல்ல. (10/n)
வாங்கிய உடன் உடனே சாப்பிட்டு முடிச்சிடனும் இல்லனா காற்று புகாத டப்பாவில் போட்டு வைக்கவேண்டும். இல்லாவிட்டால் மக்ரூன் இறுகி , மொறுமொறுப்பு தன்மை போய்விடும். இதன் காரணமாகவே பேக்கரியில் கண்ணாடி குடுவையில் போட்டு வைத்திருப்பார்கள்.

மக்ரூன் செய்ய தேவையானது
(11/n)
முட்டை, முந்திரி மற்றும் சர்க்கரை.
தரமான நாட்டுக்கோழி முட்டையை உடைத்து, லாவகமாக வெள்ளை கருவை மற்றும் பிரித்து எடுத்து வைத்து கொள்கிறார்கள். அந்த வெள்ளை கருவை ப்ளெண்டரில் போட்டு நன்றாக அடிக்க, நுரை போன்று வரும்வேளையில் அதனுடன் சர்க்கரை மற்றும்
(12/n)
இடித்த முந்திரி பவுடரை சேர்த்து மீண்டும் அடிக்க, மாவு பதம் வந்தவுடன் பேப்பர் பொட்டலத்தில் மாவை ஊற்றி முக்கோண கூம்பு வடிவில் மக்ரூனை வார்த்து எடுத்து,அதை பேக்கரி அடுப்பில் வைத்து எடுக்கிறார்கள்.

மக்ரூனின் இந்த சுவை
மற்றும் மொறுமொறுப்பான தன்மைக்கு காரணம் தரமான முந்திரிதான்.
(13/n)
பிரான்ஸ், இத்தாலி போன்ற நாடுகளிலும் மக்ரூன் பிரசித்திபெற்ற ஒன்று. அங்கு தயாரிக்கப்படும் மக்ரூன்,சான்ட்விட்ச் போன்று வேறு உருவத்தில், பற்பல வண்ணங்களோடு இருக்கும். இருந்தாலும் , முந்திரியில் செய்யப்படும் தூத்துக்குடி மக்ரூன் தான் மிகவும் பிரபலமான ஒன்று.
(14/n)
பல்வேறு ஊர்களுக்கு ஏற்றுமதி ஆகுகிறது, தூத்துக்குடி மக்ரூன்.

அதேபோல் தற்போது பொதுவாக எல்லா ஊர்களில் உள்ள பேக்கரியிலும் மக்ரூன் தயார்செய்து விற்பனை செய்யப்படுகிறது.

இதுவரை சாப்பிடாதவர்கள், மக்ரூனை சுவைத்து பாருங்கள். பிடித்த இனிப்பு பண்டமாக மாறிவிடும்.

(15/n) End 👍
#Macroon
You can follow @rakks_twitz.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.