தசாவதாரம் - கமலின் அழகான சில நுணுக்கங்கள்
தசாவதாரம் படத்துல வர்ற முதல் 15 நிமிடங்கள பலர் கருத்தியல் ரீதியா விமர்சிச்சாலும்,அந்த 15 நிமிஷங்கள் இன்னும் வியக்க வைக்குது. குறிப்பிட்ட நேரத்துக்குள்ள அவ்ளோ வரலாற சொல்லிட முடியுமா?ஒவ்வொரு வசனத்துக்கு பின்னும் ஒரு வரலாறு மறைஞ்சிருக்கும்.
இந்த வரலாறும், வசனங்களில் .
"சுங்கம் தவிர்த்த சோழனின் பேரனிடம் கர்வம் தவிர்க்க சொல்"னு ரங்கராஜ நம்பி(கமல்) சொல்வார்.இதுலேந்து குலோத்துங்க சோழன் ஆட்சியில வரி முறை தவிர்க்கப்பட்டுருப்பது தெரிகிறது...
"மத நெறி, மத வெறி ஆனது, அதுவரை தில்லையில் நடராஜருடன் ஒண்டிகுடித்தனம் நடத்திய கோவிந்தராஜரை, குலசேகர குலோத்துங்க சோழன் இடம் பெயர சொன்னான், பெயர்த்து எடுத்தான் என்பதே உண்மை" இந்த வரிகள்ல, அதுவரை "ஒண்டிக்குடித்தனம் நடத்திய"னு வர்ற வரிகள் ஒரு வரலாற சொல்லுது.
12-ம் நூற்றாண்டு, இரண்டாம் குலோத்துங்க சோழனின் ஆட்சி காலத்துல சைவ மதம் பெரும் ஆதிக்கத்துல இருந்திருக்கு.அதற்கு முன்பு,குலோத்துங்க சோழன் ஆட்சிகாலத்துல இந்த சைவ-வைணவ மோதல்கள் இந்தளவு இல்லாம சகோதர உறவு நீடிச்சதா வரலாறு சொல்லுது.
குலோத்துங்கனின் ஆட்சி அமைதியாகவும் நல்ல நிர்வாகத்துடனும் வளமாகவும் இருந்ததாகத் தெரிகிறது. எந்தவிதமான போரும் நடந்ததற்கு ஆதாரம் இல்லை. சிதம்பரம் நடராசர் கோவிலில் உள்ள கோவிந்தராசர் சிலையை கோவில் புதுப்பிப்பு பணிகளுக்க இடம் மற்றும் போது வைணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தாகவும்
பின் குலோத்துங்கன் வற்புறுத்தி மரமாத்து பார்த்ததாக தெரிகிறது. பின் வந்த வைணவர்கள், இதை குலோத்துங்கன் கோவிந்தராசர் சிலையை கோவிலில் இருந்து அகற்றியதாக திரித்துள்ளது ஒட்டக்கூத்தர் எழுதிய குலோத்துங்க சோழ உலா மூலம் அறியலாம்.
இதோட சேர்த்து, "ராமானுஜன் இருப்பிடத்தை கூற மறுத்த, கூரத்தாழ்வான் கதை தெரியுமோ!?"னு கூட வசனம் வரும்.அதோட வரலாறு இன்னும் சுவாரசியமானதா இருக்கும். கூரத்தாழ்வான் ராமானுஜரின் முதன்மை சிஷ்யன்.வைஷ்ணவர்களின் தலைவராக கருதப்பட்ட ராமாநுஜர்,அரசவைக்கு வந்து அரசனின் கட்டளைக்கு ஆட்படவேண்டும்.
கூரத்தாழ்வான் ராமாநுஜர் போல் துறவி வேடம் பூண்டு சோழன் அரசவைக்கு சென்றார். சிவனை விட துரோணம் என்ற அளவு பெரியது என்று கூறி அரசனின் சீற்றத்திற்கு ஆளாக கூரத்தாழ்வான் கண்கள் பறிக்கப் பட்டன.
கெயாஸ் தியரி.
சக நிகழ்வுகளின் கோர்வைதான் உலக சரித்திரமே. மேற்கத்திய சிந்தனைகளில் கெயாஸ் தியரி என்று ஒன்று உண்டு. இந்த விஞ்ஞான தத்துவப்படி உலக நிகழ்வுகள் யாவும் ஒன்றுக்கொண்டு சம்பந்தம் உடையவை. சக நிகழ்வுகள்.
ஒரு பட்டம்பூச்சியின் இறக்கை படபடப்பில் துவங்கும் அதிர்வுக்கும் பூகம்பத்திற்கும் கூட தொடர்பு உண்டு என்கிறது அந்தத்தத்துவம்.உண்மையில் கெயாஸ் தியரியும், குறிப்பாக பட்டர்ஃப்ளை எஃபெக்டும் என்ன சொல்கிறது என்று சுருக்கமாக பார்ப்போம்.
பட்டாம்பூச்சி விளைவு’படி ஒரு சின்ன விஷயம் பெரிசா முடியும் (தொடக்க நிலையை வைத்துக்கொண்டு இறுதி நிலையைக் கணிக்க இயலாது, இதை ‘நான் - லீனியர் டைனமிக்ஸ்’ அப்படினு சொல்வோம்!) இதைக் கடவுள் செயலாகவும் பார்க்கலாம் அப்படின்ற குறிப்புதான் அந்தக் கடவுள் சிலை
பாற்கடலில் இருக்கும் விஷ்ணு பூமியைக் காக்க அவதாரமா வருவார், அப்படி விஷ்ணு சிலை கடல்லேர்ந்து வெளிவரப்ப பூமி சுனாமின்ற சின்ன் அழிவால எபோலாங்குற பெரிய அழிவிலிருந்து காக்கப்படுகிறது என்ற புராணக் கதைகளின் படிமமாக அந்தக் கடவுள் சிலை அமைக்கப்பட்டிருக்கு!
இரான்டாம் குலோத்துங்கன் சோழன் கோவிந்தராஜ பெருமாளை கடலில் போடாமல் இருந்து இருந்தால் இன்று சிதம்பரம் நடராசர் கோயில் இல்லாமல் போகிறக்கும்
இன்றளவிலும் தில்லை நடராஜர் கோவிலில் ரங்கநாதர் சயன கோலத்தில் உள்ளார். அப்படி குலோத்துங்கசோழன் பன்னிரண்டாம் நூற்றாண்டில் பெருமாளை வெளியே அனுப்பி கடலில் தூக்கி எறிந்தது உண்மை என்றால் . இன்று இருக்கும் பெருமாள் சிலையை யார் ஆட்சிக்காலத்தில் மீண்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டது
கனமான சிலையுடன் நம்பி நீரில் மூழ்கி 800 ஆண்டுகளுக்கு பின்னர் பேரழிவு தரும் சுனாமியை ஏற்படுத்தும் கடற்பரப்பில் எளிய மாற்றங்களை ஏற்படுத்துகிறது.கேயாஸ் கோட்பாட்டிற்கு இது சாத்தியம்.இது குறைந்தது சாத்தியமானதாக இருந்தாலும் அது சாத்தியம்.எனவே முற்றிலும் தவறு எதுவும் இல்லை.
-பூவரகன் (உண்மையில் கமலை அறியாமல் காப்பாற்றினார் -பூவரகன் கமலுக்குள் நுழையும் போது மற்றும் அசின் அந்த மானல் கொல்லையர்கால் பிடிபட்டார். கமலுக்கு தப்பிக்க உதவும் கும்பலை பூவரகன் திசை திருப்புகிறார்),
- அவதார் சிங் (அறியாமல் விமான நிலையத்தில் தப்பிக்க பிளெட்சருக்கு வழி கொடுத்தார்),
- கலிஃபுல்லா மற்றும் குடும்பத்தினர் (கோவிந்தை அறியாமல் காப்பாற்றினர்)
- நரஹாஷியின் சகோதரி கொல்லப்படாவிட்டால், பிளெட்சர் கோவிந்தைக் கொன்று வைரஸை தவறான நோக்கத்திற்காகப் பயன்படுத்தியிருக்கலாம் .

இது கேயாஸ் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது .. !!!!!
நெப்போலியன் "ராமானுஜர்" என்று குறிப்பிடுகிறார். ராமானுஜர் வைணவ மதத்தை பரப்புவதில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார், அதில் அவர் பாதுகாப்புக்காக கர்நாடகாவில் ஒளிந்து கொண்டார்.சிறிய சிலையை எடுத்துகொண்டு தலைமறைவு ஆகிருப்பர்.பெரிய ஒன்றை குலோத்துங்க சோழன் அகற்றிவிட்டார்.
விக்கிரகத்தை எளிதில் கண்டுபிடித்து அதையும் அழிப்பேன் என்று சவால் விடுகிறார்.ஆனால் உண்மையில் அவர் அதை ஒருபோதும் கண்டுபிடிக்கவில்லை .
இப்போது சிறிய சிலைதான் படம் முழுவதும் வரும்.
இது கேயாஸ் கோட்பாட்டின் மற்றொரு எடுத்துக்காட்டு .குலோத்துங்க மன்னர் சிலையை கண்டுபிடித்திருந்தால், அந்த சிலை படத்தில் வந்திருக்காது, பட்டி அதில் குப்பியை போட்டிருக்க மாட்டார் .இப்போது சிறிய சிலைதான் படம் முழுவதும் வரும்.
ஒருத்தருக்கு இந்தளவு வரலாறும், கதைகளும் தெரிஞ்சிருந்தாதான், அந்த கதைய, திரைக்கதையாக்கி வசனங்கள் மூலம் வெளிப்படுத்த முடியும்... அந்தவிதத்துல, கமல்ஹாசன் இன்னும் வியக்க வைக்கிறார்
You can follow @karthi_Nan.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.