இட்லி எப்படி சார் சாப்பிடனும் ?
3 மணி நேரம் ஊற வச்சு பதமா அரைச்சு ராத்திரி முச்சூடும் (அரை மணி நேரம்ன்னு தூக்கிட்டு வந்தா ப்ளாக் தான் சொல்லிட்டேன்) வெளில வச்சு பொங்க வந்திருக்கும் மாவ நல்லா கலக்கிவிட்டு, தட்டுல துணிய விரிச்சு அதுலயோ இல்ல நல்லெண்ணைய் லைட்டா தடவி நேரடியாவோ ஊத்தி1/n
ஃப்ரெஷ் மாவுன்னா 10-12 நிமிஷம், ஃப்ரிட்ஜ்ல இருந்த மாவுன்னா 15 நிமிஷம் வேக வச்சு, தட்ட வெளில எடுத்து 1 நிமிஷம் ஆறவிட்டு, ஆவி பறக்கற இட்லி 4 எடுத்து தட்டுல போட்டு, சோம்பு பட்டை அரைச்சுவிட்டு வீடே மணக்கறா மாதிரி ஒரு கறிக்கொழம்போ, இல்ல நேத்து வச்ச மீன் குழம்போ ஊத்தி உள்ள தள்ளலாம் 2/n
அசைவம் ஆவாதுங்கறவங்க, பேருக்கு பருப்பு காமிச்சு கொஞ்சம் தளர சாம்பாரும் கூடவே கெட்டியா தேங்காய் சட்னியும் குழைச்சு அடிக்கலாம். எதே 4 இட்லிக்கு 2 சைட் டிஷ்ஷான்னு கொனட்டினா, மொளாசாந்தோ இல்ல வேர்க்கடல சட்னி கூட செட்டில் ஆனா கூட சொர்க்கம். அட ஒன்னுமே இல்லையா, கழுத எள்ளு வறுத்து 3/n
அரைச்ச இட்லி பொடிய, செக்குல ஆட்ன நல்லெண்ணைல குழைச்சு, இட்லிய அதுல தேச்சு குளிப்பாட்டி, டப்பால எடுத்து ஊறப்போட்டு சாப்ட்டா, சட்னியாவது ஹைகோர்ட்டாவதுன்னு இருக்கும். இட்லிக்கு இதான் லிமிட். இல்ல அதிகபட்சம் போனா, துண்டு துண்டா வெட்டி எண்னெய்ல பொறிச்சு, சூட்டோட பொடில பிரட்டி 4/n
காக்டெயில் இட்லின்னு திங்கலாம். இட்லி உப்புமாவா ?? வேண்டாம்யா. என்னது ? நிறைய வெங்காயம் பச்சை மிளகயா பொடியா நறுக்கி தாளிச்சு கடைசியா இறக்கும்போது ஒரு கைபிடி இட்லி பொடி தூவுவீங்களா ?? அப்ப பரவால்ல. இதுக்கு மேல கொத்து இட்லி, கைமா இட்லி, இட்லி மஞ்சூரியன் எல்லாமே தேவையில்லாத ஆணி 5/n
இட்லிக்கு நெய் சர்க்கரை தொட்டு திங்கறவங்களையே ஆன்மிக அரசியல் பண்றவங்கள பார்க்கறா மாதிரி தான் பார்ப்போம். இதுல இட்லில அல்வா, உள்ளார ஜாம் வச்சு வேகவிடறதுன்னு 🤦🏻‍♀️🤦🏻‍♀️ பாவம்டா இட்லி. அத விட்டுறுங்க. கறிக்கொழம்பும் மொளாசாந்துமாவே அது வாழ்ந்துட்டு போகட்டும் 🙏🏻🙏🏻
You can follow @ividhyac.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.