மக்கள் தலைவர் ரஜினிகாந்த் பற்றிய சில கேள்விகள்,அதற்கான பதில்கள்!
#மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம்
#இப்போ_இல்லைனா_எப்பவும்இல்லை
#ஆன்மீகஅரசியல்2021
கேள்வி:
A)தலைவர் ரஜினிகாந்த் வயதானவரா?
பதில்:
1) முன்னாள் மலேசிய பிரதமர்,பிரதமராக தேர்தெடுக்க பட்ட போது அவரது வயது 95!
2)தற்போது ரஷ்ய நாட்டின் பிரதமராக இருக்கும் விலடிமிர் புட்டின் வயது 68, தலைவர் விட ஒரு வயது சிறியவர்!
3) அமெரிக்கா நாட்டின் அதிபராக தற்போது ஆகி இருக்கும் ஜோ பிட்டன் வயது 78! தலைவர் விட 9 வயது மூத்தவர்! முன்னாள் அதிபர் டிரம்ப் தலைவர் விட 5 வயது மூத்தவர்,74 வயது!
இப்படி உலகம் முழுவதும் நிறைய அரசியல் வாதிகள் தலைவர் வயதை ஒட்டி,இல்லை அதயும் விட அதிக வயதுள்ளவர்களாக இருக்கிறார்கள்!
இப்படி தலைவர் ரஜினிகாந்த் யைப் விட வயது முதிர்ந்தவர்கள் பல நாடுகளின் அதிபராக,முதல்வராக இருக்கும் போது ஏன் தலைவர் ஒரு மாநிலத்தின் முதல்வராக நிர்வகிக்க முடியாது?
B)தலைவர் ரஜினிகாந்த் வெறும் நடிகர் தானே?
பதில்:
1)1981 முதல் 1989 வரை அமெரிக்க அதிபராக இருந்த ரொனால்ட் ரீகன் ஒரு நடிகரே!
2)தற்போதைய உக்ரைன் பிரதமர் வலடிமிர் ஜெலன்ஸ்கி ஒரு நடிகரே!
3) கலிஃபோர்னியா மா காணதின் மேயராக இருந்த கிளின்ட் ஈஸ்வுட் உம் ஒரு நடிகர் தான்!
4) சிக்கஜ் ஓகி என்னும் ஜப்பான் நடிகை அரசியல் வாதியாகி,மந்திரியாக 3 வெவ்வேறு துறைகளை 3வெவ்வேறு காலங்களில் நிர்வகித்தவர்!சுற்றுலா துறை,கட்டுமான துறை,போக்குவரத்து துறை மந்திரியாக ஜப்பானில் இருந்தவர்!
C) தலைவர் ரஜினிகாந்த் தமிழர் இல்லையே?
பதில்:
1) கமலா ஹாரிஸ் தமிழ் வழி
ஆனால் மிகவும் சக்தி வாய்ந்த அமெரிக்க நாட்டின் துணை அதிபராக பதவி யேற்று உள்ளார்!
2)S.R நாதன் சிங்கப்பூரின் முன்னாள் அதிபர்! அவரும் தமிழர் தான்!
3)மே 2015 முதல் ஆகஸ்ட் 2020 வரை கயானா வின் பிரதமராக இருந்த மோசஸ் வீராசாமி யும் தமிழ் வழி வந்தவர் தான்!
தமிழ் வழி வந்தவர்கள் பல நாடுகளின் அதிபராக,பிரதமராக ஆகும் போது பக்கத்து மாநிலத்தில் ( பக்கத்து நாடு கூட இல்லை)இருந்து வந்த ஒருவர் தமிழகத்தை ஆள கூடாதா??
D) தலைவர் ரஜினிகாந்த் நிறைய படித்தவர் இல்லையே?
பதில்:தலைவர் ரஜினிகாந்த் பள்ளி படிப்பை முடித்தவர், தமிழகத்தில் திரைப்பட கல்லூரியில் கல்லூரி படிப்பயும் முடித்தவர்!காமராஜர் படிக்காதவர் தான் ஆனால் தமிழகத்தில் கல்வி புரட்சியே கொண்டு வர வில்லையா?? தலைவர் ரஜினிகாந்த் நிறைய புத்தகங்களை
படித்து கொண்டு வருகிறார்!உள்நாட்டு, உலகளாவிய அரசியல் நிகழ்வுகளை,மாற்றங்களை உன்னிப்பாக கவனித்து வருகிறார் தலைவர்!அவ்வளவு ஏன் மறைந்த சிங்கப்பூர் பிரதமர் லீ குவான் தான் தலைவரின் அரசியல் வழிகாட்டி !அவரது பல நேர்காணல்கள் களை பாருங்கள் புரியும்!
E) தலைவர் ரஜினிகாந்த் புகழ்,அதிகாரம்,பணத்திற்காக அரசியலுக்கு வருகிறாரா??
பதில்:
1) தலைவர் மிகவும் புகழ் பெற்றவர், ஒட்டுமொத்த தமிழக அரசியல்வாதிகளை விட உலகம் முழுவதும் அறியப்பட்டவர்!
2)அவருக்கு ரசிகர் படையும், மன்றங்களும் பல நாடுகளில் உள்ளது!ஜப்பானில் கூட மிக பெரிய ரசிகர் கூட்டம்
கொண்டவர்! டோக்கியோ வில் மட்டும் 3000 க்கும் அதிகமான ரசிகர் மன்றங்கள் உள்ளன!அவர்கள் யாரும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் அல்ல! ஜப்பானியர்கள் அனைவரும்! அவ்வளவு பேர்,புகழ்!
3)பணம்? அவர் இந்தியாவில் மட்டும் அல்ல ஆசியாவிலேயே அதிக வெற்றி கொண்ட நடிகர்,அவருக்கு பணம் ஒரு பொருட்டே இல்லை!வீட்டில் இருந்து விளம்பர படங்களில் நடித்தாலே பல கோடிகள் சம்பாதிக்க முடியும்!அவரின் புகழை வாடிக்கையாளர்களின் தேர்வாக ஆக்க அவர் ஒருபோதும் விரும்பாததால் விளம்பர படங்களில்
ஒருபோதும் விரும்பாததால் விளம்பர படங்களில் நடிக்க வில்லை!அவர் நடித்த மூன்றே விளம்பரபடங்கள்,போலியோ விழிப்புணர்வு முகாம்,கண்தானம் இரண்டும் இலவசமாக நடித்து குடுதவை! மற்றொன்று தமிழக சிறு தொழில் புரிவோர் க்கு உதவவும் உள்ளூர் பானங்களை ஊக்கு விக்கவும் நடித்த கோலா விளம்பரம் மட்டுமே!
30 வருடங்களாக அவர் செய்து வரும் சமூக பணிகள் எண்ணிலடங்கா! விளம்பர படுத்தியதும் இல்லை,வேண்டுமென்றால் ஆராய்ந்து தெரிந்து கொள்ளுங்கள்!
4)அதிகாரம்: அவர் இரண்டு வார்த்தை சொன்னால் தெற்கு முதல் வடக்கு வரை, ஏன் உலகம் முழுவதும் தலைப்பு செய்தி
அதிலிருந்து தெரிந்து கொள்ளுங்கள் அரசியல் வரும் முன்பே இவர் எவ்வளவு அதிகாரம் மிக்கவர் என்று!
F) ஏன் தலைவர் ரஜினிகாந்த் க்கு இப்ப மக்கள் மீது கரிசனம்?
பதில்:
35 வருடங்களாக மக்களின் குரலாக இருப்பவர் அவர்! சந்தேகம் இருந்தால் செய்தித்தாள்களை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்!அந்த கால கட்டங்களில் சமூக ஊடகங்களின் வெளிச்சம் இப்ப இருக்கும் அளவிற்கு இல்ல!
அவர் எப்போதுலிருந்து மக்களுக்கு குரல் குடுக்க ஆரம்பித்தாரோ அப்போது இப்ப இருக்கும் அரசியல்வாதிகள் பள்ளி சிறுவர்களாக இருந்த காலம்!
G) தலைவர் ரஜினிகாந்த்க்கு என்ன தகுதி இருக்கிறது?
பதில்:
நேர்மை,வரிகளை ஒழுங்காக கட்டுபவர்,உழைத்து சம்பாதிதவர், யாரையும் ஏமாத்தியோ, கொள்ளையடுசோ,கொலை பண்ணியோ சம்பாதிதவை அல்ல!பெண் அடிமை கிடையாது!
நல்ல இரு மகள்களின் பொறுப்பான தந்தை!வீட்டில் நல் தந்தையாக இருப்பவர், நாட்டிற்கும் நல் தந்தையாக இருப்பார்! தேவை என்றால் சிக்கலான பிரச்சனைகளில் அவரது கருத்தை சொல்ல ஒரு போதும் தயங்கியது இல்லை!யாரை பார்த்தும் பயந்தது இல்லை!
அவரின் எதிரிகள்,வெருப்பவர்களை பற்றி பேசும் போது கூட பணிவாக,கனிவாக பேசுபவர்!அடுத்தவர்களை வழி நடத்துவதற்கு ஏற்ற தகுதி வாய்ந்த தலைவர் அவர்,!
#மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம்
#இப்போ_இல்லைனா_எப்பவும்இல்லை
#ஆன்மீகஅரசியல்2021
இந்த நீண்ட பதிவு, நான் You tube video ஒன்றில் பதிலளிபில் கண்ட பதிவு! பதிவிற்கு சொந்த காரரான ராஜா ப்ரோ விற்க்கு வாழ்த்துக்கள்! நன்றி! மகிழ்ச்சி!🙏🙏🤘🤘👏👏❤️❤️
தமிழ் மொழி பெயர்ச்சி, pictures மட்டுமே என்னுடையது,ஏதேனும் தவறு இருந்தால் மன்னிக்கவும்🙏🙏🤘🤘
#ஆன்மீகஅரசியல்2021
You can follow @kumarwinn.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.