💪 இது ஒரு மீள்பதிவு ✍️

சில பயனுள்ள Google செயலிகள் குறித்தும் அதனை பற்றிய சில தகவல்களுடன் பார்ப்போம்:- 👇👇

http://1.Google  Assistant : இந்தியர்களிடம் மாட்டிக்கொண்டு ரொம்பவே சிரமப்படும் ஒரு செயலி. அதிகம் பேர் லவ் புரபோஷ் செய்த ஒரு பெண் (Sorry செயலி). (1/Cont)
ஏழைகளுக்கு ஏற்ற எள்ளு உருண்ட மாதிரி iphone சிரி இல்லாதவர்களுக்கு Google Assistant. கண் பார்வை அற்றவர்கள் சிலர் உபயோகிப்பதை பார்த்து இருக்கிறேன். (2/Cont)
http://2.Google  Duo:

வீடியோக் கால் செய்ய உதவும் ஒருசெயலி. போன் நம்பர் இல்லாமல் கூட போன் செய்ய முடியும். (3/Cont)
http://3.Google  Docs:

ஆன்லைனில் பாதுகாப்பாக Documents உருவாக்க மற்றும் பார்க்க உதவும் ஒரு செயலி. மைக்ரோசாப்ட் ஆபீஸ் இல்லாதவர்கள் உங்களது போனில் இல்லையென்றால் இதனை உபயோகப் படுத்தலாம். பாதுகாப்பான ஒன்று. (4/Cont)
http://4.Google  Find My Device :

ஆன்டிராய்டு இயங்கு தளத்தை கொண்டு இயங்கும் கருவிகளை காணாமல் போனால் கண்டறிய உதவும் ஒரு செயலி ஆகும்.ஆனால் ஒன்று அந்த போனின் GPS மற்றும் இணைய சேவை On ஆகி இருக்க வேண்டும். switch off செய்யப்படாமல் இருப்பின் கண்டறிய முடியும். (5/Cont)
http://5.Google  Fit : உங்களுடைய ஆரோக்கியதினை Track செய்ய உதவும் ஒரு செயலி. (6/Cont)
http://6.Google  Drive:

கூகிளில் அக்கவுண்ட் உள்ளவர்களுக்கு Google நிறுவனத்தால் வழங்க படும் 15 ஜிபி அளவுள்ள இலவச கிளவுட் சேமிப்பு செயலி. நம்முடைய முக்கியமான ஆவணங்களை இதில் ஸ்கேன்செய்து சேமித்து வைத்து கொள்ளலாம். (7/Cont)
மேலும் தேவைப்படும் இடங்களில் எளிதாக நகல் எடுத்தும் கொள்ளலாம். (சீனா தவிர).

7. Google Indic keyboards:

இந்தியாவிற்கென பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட செயலி. இந்தியாவின் பன்மொழி அமைப்பினை உணர்ந்து இந்தியர் ஒவ்வொருவரும் தங்கள் தாய்மொழியில் தட்டச்சு செய்ய உருவாக்க பட்ட செயலி.(8/Cont)
8. Google Keep :

நமக்கு கன நேரத்தில் தோன்றும் ஐடியா மற்றும் Notes, Numbers இதை சேமித்து வைக்க உதவும் செயலி.
(9/Cont)
9. Google Earth :

முன்பெல்லாம் உலகத்தை நிமிட நேரத்தில் சுற்ற முடியும் என்று கூறினால் யாரும் நம்ப மாட்டார்கள் ஆனா இந்த செயலி இருந்தா 1 Sec'ல் சுற்ற முடியும். அதும் இல்லாமல் நம்ம இஷ்டத்துக்கு பூமியை சுற்றி விளையாட முடியும். குழந்தைகளுக்கு ஒரு பயனுள்ள செயலி இது.
(10/Cont)
10. Blogger

உங்களுக்கான இலவச வலைப்பக்கம் உருவாக்க உதவும் செயலி .உங்கள் வலைத்தளம் அதிக பார்வையாளர் எண்ணிக்கை அடையும்போது Google AdSense உபயோக படுத்தி உங்களின் எழுத்து திறன் மூலம் பணம் சாம்பாத்திக்க முடியும். (11/Cont)
11. Google Translate

உங்களுக்கு தெரியாத மொழியில் உள்ள வார்த்தைகளை உங்கள் மொழியில் மொழி பெயர்ப்பு செய்ய உதவும் செயலி. இதன் சிறப்பு அம்சம் ஒருவேளை உங்களுக்கு அந்த வார்த்தை எந்த மொழியில் உள்ளது என தெரியவில்லை என்றால் (12/Cont)
Detect Languages என்ற பொத்தானை அழுத்தி அறிந்து கொள்ளலாம். 75% நம்பகமான செயலி (13/Cont)
12. Google Photos:

உங்களது புகைப்படங்களை கிளவுட் storage. இல் சேமிக்க உதவும் செயலி.மேலும் அந்த புகைப்படங்கள் எப்போது எடுக்கப்பட்டது, நாள் குறித்த விவரங்கள் அடிப்படையில் அதுவே வரிசை அமைத்து சேமித்து கொள்ளும். (14/Cont)
13. Google Sheets:

சிம்பிளா சொன்னா Excel Sheets. MS office தங்களது கைபேசியில் இல்லாதவர்கள் ஆன்லனிலேயே Excel Sheet உருவாக்க மற்றும், பார்க்க உதவும் செயலி. (15/Cont)
14.Voice Access:

கையினை உபயோக படுத்தாமல் உங்களது குரல் மூலம் கைப்பேசியினை கட்டுபடுத்த மற்றும் செயல்பட உதவும் செயலி. (16/Cont)
15. Google Podcast's:

Podcasts கேட்பவர்களுக்கு உதவும் செயலி, தமிழில் கூட பிரபலமான சில பிரபலமான யூட்யூப் வீடியோக்களின் podcasts இதில் உள்ளது.
(17/Cont)
16. Google Slides :

சிம்பிளா சொன்னா, Ms PowerPoint க்கான மாற்று படைப்பு. (18/Cont)
17. Google PDF Viewer:

PDF டாகுமெண்ட்களை திறந்து பார்க்க உதவும் செயலி. குறைந்த storage அளவே உடையது. (19/Cont)
18. Google Tasks:

உங்களது இலக்குகளை மற்றும் பணிகளை குறித்து வைத்து கொண்டு உங்களுக்கு சரியான நேரத்தில் நியாபக படுத்த உதவும் செயலி.
(20/Cont)
19. Google YouTube:

உலகில் இரண்டாம் வீடியோ தளமான YouTube.பலரது திறமைகளை வெளிப்படுத்து ஒரு வாய்ப்பாகவும் இருந்தது. அதன் மூலம் நாம் வருமானமும் பெறலாம்.தன்னிடம் இருக்கும் கேள்விகளை மற்றவர்களிடம் கேட்கமுடியாத தருனத்தில் YT நமக்கு கை கொடுக்கும். அது எந்த சந்தேகம் என்றாலும்!
(21/Cont)
20. Files by Google :

உங்களுடைய செல்போனின் Storage திறனை அறியவும், தேவையற்ற Temp Files, Chache நீக்க உதவும் application.
இது மட்டும் அல்லாமல் உங்களுடைய செல்போனில் உள்ள வீடியோ , போட்டோஸ் ஷேர் செய்யும் ( அதாங்க shareit) வசதியும் இதில் உள்ளது. (22/Cont)
21. Google Pay ( Formarly Tez) :

எல்லாருக்கும் தெரிந்த ஒன்று தான் பணம் அனுப்ப அல்லது பெற உதவும் ஒரு செயலி. (23/Cont)
நான் உபயோகப்பதும்டுத்தும் செயலிகளை இங்கு குறிப்பிட்டுள்ளேன். மேலும் இந்த செயலிகளை பயன்படுத்த ஒரு Google account மட்டும் இருந்தால் போதுமானது. தனியாக பணம் செலுத்த தேவையில்லை அனைத்தும் இலவசமானது. இன்னும் நிறைய செயலிகள் Google மூலம் புதிது புதிதாக அறிமுக படுத்த படுகின்றது. (24/Cont)
அது குறித்தும் பதிவிட முயற்சி செய்கிறேன். மேலும் இவை அனைத்தும் பெருங்கடலில் பிடிக்க பட்ட சிறு மீன்களே.. இன்னும் பல உபயோகமான செயலிகள் உள்ளது.

வேறு ஏதாவது பயனுள்ள செயலியினை விட்டுருந்தால் கமேன்ட்'ல் கூறவும். (25/Cont)
@selvachidambara @ChennaiViswa Tag'ல் விடுபட்ட வர்கள் மண்ணிக்கவும்🙏 (28/End)
நன்றி 🙏 மகிழ்ச்சி 👑
You can follow @Jeganm27.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.